குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது. இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து “மஹா ராஸ்” திருவிழாவில் பங்கேற்றனர்.