புதுடெல்லி: 2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 16வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய மகளிர் பேட்மிண்டன் விளையாட்டில் ஐதராபாத்தை சேர்ந்த பி.வி.சிந்து நட்சத்திர வீராங்கனையாக வலம் வருகிறார்.
போர்ப்ஸ் பத்திரிகையின் 2023ம் ஆண்டின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில், ரூ.58 கோடி சம்பளத்துடன் பி.வி.சிந்து 16வது இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு பி.வி.சிந்து போர்ப்ஸ் பத்திரிகையில் 12வது இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.