மதுரை: ரூ.70 லட்சம் பண மோசடி செய்த புகாரில் சிக்கிய தலைமை காவலர் வீரதங்காள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வீரதங்காள் மீது மதுரை குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக வீரதங்காள் சகோதரர் ஜீவா அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரதங்காள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் மதுரை மாநகர காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். …