சேலம், செப்.23: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம் வரவேற்றார். இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 365 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் கவுன்சிலர்கள் மோகனபிரியா, ஷாதாஜ், மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
365 மாணவர்களுக்கு சைக்கிள்
previous post