சென்னை: சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களை பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது. தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.