தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை -200 கிராம் (ஊறவைத்தது),
கீரை – 1 கட்டு (ஏதேனும் வகை கீரை),
வெங்காயம் – 100 கிராம்,
உருளைக்கிழங்கு (வேகவைத்தது) – 150 கிராம்,
உப்பு – சுவைக்கு,
சீரகம் ½ ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 6, எண்ணெய் – 200 கிராம்.
செய்முறை:
கொண்டைக்கடலையை வேகவைத்து தண்ணீர் வடித்து கரகரப்பாக பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து அரைத்து அத்துடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, அரிந்த கீரை, வெங்காயம் ேசர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடிவங்களில் தட்டி தவாவில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான வெள்ளை கொண்டைக்கடலை கீரை கட்லெட் ரெடி.