கர்நாடக: கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 10,306 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீரும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 5,306 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,257 கனஅடியாக உள்ளது.