மணிப்பூர்: மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாட்டில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். மணிப்பூரில் சூழ்நிலையால் விளையாட்டு வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட கூடாது, தேசிய அளவில் ஆர்வமுள்ள எங்கள் வீரர்களுக்கு நாடு முழுவதும் யார் உதவினாலும் நாங்கள் வரவேற்கிறோம் என பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.