மதுரை: மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் அமைவதில் குழப்பம் இல்லை என்று திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் திருமங்கலத்தில் ஆய்வு செய்த நிலையில் இயக்குநர், மதுரையில் புராதான சின்னங்கள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது என அவர் பேட்டியளித்தார்.