சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாக்காக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை , வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.