ஈரோடு,: பெருந்துறை அடுத்துள்ள சேனட்டோரியம் அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கமாகும். இந்தாண்டு திருவிழாவானது கடந்த 21ம் தேதி கம்பம் நடப்பட்டது. 25ம் தேதி குத்துவிளக்கு பூஜையும், 26ம் தேதி பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 27ம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மஞ்சள் நீராட்டு மற்றும் மறு பூஜையுடன் விழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.