9 கி.மீ. தூரம் நடந்து முதல்வர் மம்தா பிரசாரம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களவை தேர்தலுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். நாள்தோறும் இரண்டு பேரணிகளில் பங்கேற்று தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றார். பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வருகின்றார்.

நேற்று பிரதி பானிக் மோர் பகுதியில் இருந்து ஜெஸ்சோர் சாலையில் உள்ள விமான நிலைய நுழைவு எண் 2 வரை சுமார் 4கி.மீ. தூரம் தனது கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். இதேபோல் தெற்கு கொல்கத்தாவில் சுமார் 5கிலோமீட்டர் தூரம் நடந்த பேரணியிலும் கலந்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

 

 

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!