99 ரன்னில் சுருண்டது தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி: 2ம் நாளிலேயே முடிவுக்கு வந்த ஆட்டம்

பிரிஸ்பேன்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் 2ம் நாளிலேயே முடிவுக்கு வந்த 2வது டெஸ்டாக அமைந்த இபோட்டியின் ஆடுகளம், ‘அபாயகரமானதாக’ இருந்ததாக சர்ச்சையை கிளப்பி உள்ளது. காபா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச… தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 152 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (48.2 ஓவர்). கைல் வெரெய்ன் 64, பவுமா 38 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், லயன் தலா 3, கம்மின்ஸ், போலண்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்திருந்தது. வார்னர் 1, கவாஜா, லாபுஷேன் தலா 11, ஸ்மித் 36, போலண்ட் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். டிராவிஸ் ஹெட் 78 ரன்னுடன் களத்தில் இருந்தார். 2ம் நாளான நேற்று அந்த அணி  218 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (50.3 ஓவர்). கிரீன் 18, ஹெட் 92, கேரி 22, ஸ்டார்க் 14 ரன் எடுக்க, கம்மின்ஸ், லயன் டக் அவுட்டாகினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 4, ஜான்சென் 3, அன்ரிச் 2, என்ஜிடி 1 விக்கெட் எடுத்தனர்.66 ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் 37.4 ஓவரில் 99 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கயா ஸோண்டோ 36*, பவுமா 29, மகராஜ் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (4 பேர் டக் அவுட்). ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 5, ஸ்டார்க், போலண்ட் தலா 2, லயன் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 34 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 7.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. கவாஜா 2, வார்னர் 3, ஸ்மித் 6, ஹெட் (0) பவிக்கெட்டை பறிகொடுத்தனர். லாபுஷேன் 5, கிரீன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 13 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் மெல்போர்னில் 26ம் தேதி தொடங்குகிறது.ஒரே நாளில் 19 விக்கெட்* பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாளில் 15 விக்கெட் சரிந்த நிலையில், 2ம் நாளான நேற்று 19 விக்கெட் வீழ்ந்தது. * ஆஸி. மண்ணில் 2ம் நாளிலேயே முடிவுக்கு வந்த 2வது டெஸ்ட் போட்டியாக இது அமைந்தது. முன்னதாக, 1931ல் மெல்போர்னில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் மோதிய டெஸ்ட் போட்டியும் 2 நாளில் முடிந்துள்ளது. * மிகக் குறைந்த பந்துகளில் முடிவடைந்த டெஸ்ட் போட்டிகளின் வரிசையில் இது 8வது இடத்தை பிடித்துள்ளது (866 பந்து). கடந்த ஆண்டு அகமதாபாத்தில் இந்தியா – இங்கிலாந்து மோதிய டெஸ்ட் 842 பந்துகளில் முடிவுக்கு வந்தது 7வது இடத்தில் உள்ளது. * இந்த ஆண்டில் தென் ஆப்ரிக்கா 8வது முறையாக 200 ரன்னுக்கும் குறைவான ஸ்கோரில் ஆல் அவுட்டாகி உள்ளது. இதற்கு முன் 1912, 2015, 2018ல் அந்த அணி 7 முறை இப்படி ஆட்டமிழந்துள்ளது. …

Related posts

பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ்

மகளிர் உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்