வெளிநாட்டு இறக்குமதிக்கு தடை பாதுகாப்பு துறை கொள்முதலில் மேலும் 928 இந்திய தயாரிப்பு பொருட்கள்

புதுடெல்லி: ஒன்றிய அரசு உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதுகாப்புதுறையில் தற்சார்பு இந்தியாவை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியை குறைப்பதற்கும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்று கருவிகள்,உதிரி பாகங்கள் கொண்ட 4வது ஆக்கப்பூர்வ உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீ ஜன் இணையப்பக்கத்தில் உள்ளன. இந்த 4வது உள்நாட்டு மயமாக்கல் பட்டி யல் (பிஐஎல்) மாற்றுக் கருவிகள், உதிரி பாகங்கள் தொடர்பாக 2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும். ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன.ஆயுத தளவாடங்கள் இறக்குமதியை தடை செய்வதற்கான காலக்கெடு 2023 டிசம்பர் முதல் 2028ம் ஆண்டு டிசம்பர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு

கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு