90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆடு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்

 

புதுக்கோட்டை,செப்.30: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வெட்டன் விடுதி அருகே உள்ள மின்னம்புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தையா. இவருக்கு சொந்தமான 90 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி என்பவருக்கு சொந்தமான ஆடு தவறி விழுந்துள்ளது.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் கயிரைக் கட்டி கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்