9 பவுன் நகை மாயம்

திண்டுக்கல், ஜூன் 1: நீலகிரி மாவட்டம் ஜெயந்தி நகரை சேர்ந்தவர் அருளப்பன் மனைவி சரண்யா (34). இவர் கடந்த 26ம் தேதி திண்டுக்கல் அருகே மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வந்திருந்தார். விசேஷம் முடிந்தபின் அன்றிரவு தங்க செயின், தோடு, மாட்டல் உள்ளிட்ட 9.5 பவுன் எடையுள்ள நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்துவிட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது பையில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். நகைகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்