தமிழக மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்: 3 பேருக்கு 6 மாதம் சிறை

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.50,000 அபராதம், 3 பேருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்தது. கடந்த ஆக.27ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற கிங்சன் (40), மெக்கன்ஸ் (37), ராஜ் (43), இன்னாசி ராஜா (45), சசி (40), மாரியப்பன்(45), அடிமை(33), முனியராஜ் (23) ஆகிய 8 பேர் இலங்கை கடற்படையால் கைதாகினர். பின்னர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து தலைமன்னார் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக், 5 மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விடுதலை செய்தும், 3 மீனவர்கள் 2வது முறையாக சிறை பிடிக்கப்பட்டதால் 6 மாத சிறை தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 3 மீனவர்கள் கொழும்பில் உள்ள வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கடந்த ஜூலை 23ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில 7 பேரை, கடந்த ஆக.29ம் தேதி ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. அந்த 7 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து, மீன்வளத்துறையினர் மூலம் தனி வாகனத்தில் ராமேஸ்வரத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.

 

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்