தமிழ்நாட்டை சேர்ந்த 8 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையின் அத்துமீறலால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு செல்லும் நிலை நீடிக்கிறது. கைது நடவடிக்கையை தடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 8 பேரும் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 ராமேஸ்வரம் மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா