85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் வாக்களிப்பது எப்படி?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக 12டி படிவம் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வழங்கப்படும். அதை பெற்று, வீட்டில் இருந்தே வாக்குப்பதிவு செய்யலாம். மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் இந்த வசதி அளிக்கப்பட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் நாளுக்கு முன்பாக வீட்டில் இருந்தே வாக்களிக்கும் தேதியை நிர்ணயிப்பார். வாக்காளர்களின் வீட்டுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோகிராபர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வாக்குப்பெட்டியுடன் சென்று வாக்குப்பதிவை வீடியோ எடுப்பார்கள். இது சுமார் 20 நிமிடங்களில் முடிந்து விடும். அவர்கள் வாக்குகள் தபால் வாக்குகளில் சேர்க்கப்பட்டு எண்ணப்படும்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு