84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு வளைவு பிரச்னைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை

சென்னை: அமெரிக்க, பாங்காங் நகரில் வசித்து வரும் 84 வயது முதியவருக்கு, ஓராண்டுக்கு முன் கடுமையான முதுகுவலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வந்தார்.  இப்பிரச்னைக்காக ஒரு நுண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் பயனில்லை. பாங்காங்கிற்கு திரும்பிச் சென்ற பிறகு இயன் முறை மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு இவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் வலி மற்றும் பாதிப்பு சீராகவில்லை. மும்பையைச் சேர்ந்த மருத்துவர்களை அவர் தொடர்பு கொண்ட போது வலியைக் குறைப்பதற்கான ஊசி மருந்துகள் இவருக்கு பரிந்துரைக்கப்பட்டன. எனினும், இதுவும் பயனளிக்காத காரணத்தால் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை இவர் பயன்படுத்திப் பார்க்கத் தொடங்கினார். பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முறை சிகிச்சைகளுக்குப் பிறகு சென்னை – காவேரி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் பாலமுரளியை காணொலி மூலம் தொடர்பு கொண்டார்.  அப்போது, முதியவர் தனது ஸ்கேன் சோதனை அறிக்கைகளை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். வலியில்லாத, சிறப்பான தரத்திலான வாழ்க்கை என்ற இலக்கை கொண்ட ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்று அவருக்கு யோசனை அளிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு மனதளவில் அவரை தயார் செய்வதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை வந்த அவருக்கு 8 மணி நேரம் நடைபெற்ற முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மிகத்துல்லியமாக செய்யப்பட்டது. இதில் அதிகளவு ஆபத்துகள் இருந்த போதிலும் கூட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது சவுகரியமாக இவரால் நடக்க முடிகிறது. 6 மாத காலத்திற்குள் இவர், மீண்டும் அவரது வழக்கமான ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ள முடியும், என டாக்டர் பாலமுரளி தெரிவித்தார்.சிகிச்சையளித்த குழுவின் எலும்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கீர்த்திவாசன் கூறியதாவது: ஆதரவளிக்கும் அமைப்பு முறையோ, குடும்பமோ இவருக்கு இல்லாத காரணத்தால் இவரது விசா மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதி செயல் முறையை ஏற்பாடு செய்தோம்.  ஒரு வேறுபட்ட கலாச்சாரத்தின் பின்புலத்திலிருந்து இவர் வந்திருந்ததால், இவரது சர்வதேச வாழ்க்கைமுறைக்கு இணக்கமான உணவுகள் மருத்துவமனையில் இவருக்கு வழங்கப்பட்டது,” என்றார். மருத்துவமனை இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: பாதிப்பிலிருந்து குணமடைந்து, இயல்பு வாழ்கைக்கு திரும்பும் நம்பிக்கையோடு தொலைதூரத்திலிருந்து இங்கு வந்திருக்கும் இந்நோயாளியின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிஜமாக்கியிருக்கும் டாக்டர் பாலமுரளி மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன். இந்த முதியவர் முழு நலம்பெற்று வாழ்க்கையின் இனிய அம்சங்களை அனுபவிக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறினர். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்