83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (20.7.2021), தொழில்துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு”  என்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களாக, 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் துவக்கிவைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மேற்கூறிய 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகிட வகை செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியின் போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-ஐ துவக்கி வைத்தார்கள்.  தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், வணிகம் புரிதலுக்குத் தேவையான நூறு சேவைகள் இந்த இணையதளத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த Digital Accelarator திட்டம் மூலம், தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகப் புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மானியத்திற்காக ஏறக்குறைய 75 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான அனுமதி உத்தரவுகளை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பின்வரும் நிறுவனங்களுக்கு வழங்கினார்கள்:வ. எண்    நிறுவனம்    மானியத் தொகை ரூபாய்    1    Core Stack    1.0 கோடி    2    Atsuya Technologies    60.40 இலட்சம்    3    Pacifyr 44.40 இலட்சம்    4    Swire Pay    41.07 இலட்சம்    5    Plethy    1.0 கோடி    மேலும், உயர்தர உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான இயந்திர பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, General Electric நிறுவனம் ஒரு திறன்மிகு மையம் (Centre of Excellence) அமைக்க திட்டமிட்டுள்ளது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் டிட்கோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:-  17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054  நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.  இந்த முதலீடுகள், மின் ஆலைகள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பச் சேவைகள், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருத்துவப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பின்வரும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன:வ. எண்    நிறுவனம்    உற்பத்திப் பொருள் / துறை    முதலீடு ரூ. கோடிகளில்    வேலை வாய்ப்பு    இடம்    1    JSW Renew Energy Two Limited மின் சக்தி          3000                        1600    தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர்    2    ZF Wabco (Germany)  மோட்டார் வாகன உதிரிபாகங்கள்    1800    5000    சிப்காட் ஒரகடம் – கட்டம் 2    3    Capita Land  (Singapore) தகவல் தரவு மையம்    1200    100    அம்பத்தூர் சென்னை    4    Srivaru Motors மோட்டார் வாகன உதிரி பாகங்கள்    1000    4500    கோயம்புத்தூர்    5    TCS Phase -III தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவைகள்    900    15000    சிப்காட் தகவல் தொழில் நுட்ப பூங்கா, சிறுசேரி    6    Avigna Industrial Park தொழில் பூங்கா    837    1395    மதுரை, ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு    7    J Matadee  தொழில் பூங்கா    730    50    இராணிப்பேட்டை    8    Webwerks/Iron Mountaiன் மின்னணுவியல் / தகவல் தொழில் நுட்பம்    700    100    சிறுசேரி / அம்பத்தூர்    9    ESR Investment Holdings தொழில் பூங்கா    550    120    காஞ்சிபுரம் மற்றும் ஓசூர்    10    Zhen Ding Developers India Private Limited (Avary) (Taiwan) மின்னணுவியல் / தகவல் தொழில் நுட்பம்    519    2000    சிப்காட் வல்லம் வடகால் தொழில் பூங்கா    11    Subam paper and boards pvt ltd    FMCG 500    2000    வடுகம்பட்டி கிராமம், திருநெல்வேலி    12    Arthanari Loom Centreஜவுளி    500    1100    கரூர் மற்றும் சேலம்    13    Jurojin Developers -House of Hiranandhini      தொழில் பூங்கா    500    300    ஒரகடம், காஞ்சிபுரம் மாவட்டம்    14    Cheyyar SEZ   (Lotus Footwear) (Taiwan)    காலணிகள்    500    6000    திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்    15    Cheyyar SEZ   (Lotus Footwear) (Taiwan)காலணிகள்    400    5000    பர்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம்    16    Cheyyar SEZ (Growth Link ) (Taiwan)    காலணிகள்    160    2000    செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்    17    Tamilnadu Petro Products Ltd இரசாயன ஆய்வுக்கூடம்    435    300    மணலி, சென்னை    18    KKR Group of Companyஜவுளி    320    1250    நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை    19    Arcv Holdings Pvt Ltd    விண்வெளி மற்றும் பாதுகாப்பு    300    400    கோயம்புத்தூர்    20    RajRatan Global Wire Ltd பொது உற்பத்தி    300    250    ஸ்ரீபெரும்புதூர் அல்லது ஒரகடம்    21    AAG Centre for Aviation Training Pvt Ltd விண்வெளி மற்றும் பாதுகாப்பு    250    100    ஒன் ஹப், காஞ்சிபுரம்    22    Hyoseong  (Korea) மோட்டார் வாகன உதிரிபாகங்கள்    227    1096    ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம்    23    KTV Edible Oils Pvt Ltd சமையல் எண்ணெய்    220    100    சிப்காட் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்    24    AST Alloys India Pvt Ltd மோட்டார் வாகன உதிரிபாகங்கள்    175    300    காஞ்சிபுரம்    25    Premier Fine Linens Pvt Ltd ஜவுளி    150    1100    சூலூர், கோயம்புத்தூர் மாவட்டம்    26    Tube Investment மூன்று சக்கர மின்வாகனங்கள்    140    580    அம்பத்தூர்    27    Vinveli Automated Systems Pvt Ltd பொது உற்பத்தி    125    100    உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்    28    Rathik Industrial & Logistics Park Pvt ltd தொழிற் பூங்காக்கள்    110    800    ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம்    29    Rapid Consulting Services LLP உற்பத்தி மற்றும் சேமிப்புக் கிடங்குகள்    110    33    ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்    30    Letz Connect Technologiess    திறன் பயிற்சி    100    1200    தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில்    31    Araymond Fasteners (France)பொது உற்பத்தி    100    250    ஸ்ரீபெரும்புதூர் / ஒரகடம் / ஓசூர்    32    Axle Tech India Private Limited (USA)விண்வெளி மற்றும் பாதுகாப்பு    80    100    ஓசூர்    33    Shree Sarvaloka Textiles Private Limited ஜவுளி    78    600    சிவகாசி, விருதுநகர் மாவட்டம்    34    Cryolor Asia Pacific Private Limited (France)மருந்துப் பொருட்கள்    70    90    மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்    35    Levim  Lifetech Private Limited மருந்துப் பொருட்கள்    55    140    காஞ்சீபுரம்    மொத்தம்    17141    55054        அடிக்கல் நாட்டுதல்:-  இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 9  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்:வ. எண்    நிறுவனம்    உற்பத்திப் பொருள் / துறை    முதலீடு ரூ. கோடிகளில்    வேலை வாய்ப்பு    இடம்    1    AG & P Pratham இரசாயனம்    1700    3400    வல்லம் வடகால், காஞ்சிபுரம் மாவட்டம்    2    TCS Phase II  (GIM 2019)      தகவல் தொழில்நுட்பம்     876    15000    சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா,  சிறுசேரி    3    Eickhoff Wind Asia Pvt Ltd காற்று விசையாழிகளுக்கான கியர் பெட்டிகள்    621    319    வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்    4    Super Auto Forge எந்திர உபகரணங்கள்    125    400    காஞ்சிபுரம் மாவட்டம்    5    Gurit India Pvt Ltdகாற்றாலை உதிரி பாகங்கள்    320    300    ஸ்ரீபெரும்புதூர். காஞ்சிபுரம் மாவட்டம்    6    Livia  Polymer Products Private Limited பாலிமர் பொருட்கள்    200    1200    புதுக்கோட்டை மாவட்டம்    7    Inox Air Products  திரவ மருத்துவ ஆக்ஸிஜன்    150    105    ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்    8    Ansell Sterile மருத்துவ கையுறைகள்    138    800    சிப்காட் பெருந்துறை, ஈரோடு மாவட்டம்    9    Cubic  Modular System India Pvt Ltd மின்சார இணைப்புகள்    120    106    காஞ்சிபுரம் மாவட்டம்    மொத்தம்    4,250    21,630        புதிய திட்டங்களைத் துவக்கி வைத்தல்:-  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 5 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் துவக்கி வைத்தார்கள்:வ. எண்    நிறுவனம்    உற்பத்திப் பொருள்/ துறை    முதலீடு ரூ. கோடிகளில்    வேலை வாய்ப்பு    இடம்    1    Vikram Solar சூரிய மின்கலன்    5317    4738    மிஸீபீஷீsஜீணீநீமீ, ஒரகடம்    2    Integrated Chennai Business Park DP World (UAE) தொழில் பூங்கா    1000    300    திருவள்ளூர் மாவட்டம்    3    ESR Advisors (Singapore)  தொழில் பூங்கா    500    60     ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் காஞ்சிபுரம்    4    Coral Manufacturing Works Indகாற்றாலை மின்சக்தி    200     1400    மொடக்குறிச்சி, ஈரோடு மாவட்டம்    5    Dinex (Denmark தானியங்கி உதிரி பாகங்கள்    100    300    மஹிந்திரா வேர்ல்டு சிட்டி, செங்கல்பட்டு மாவட்டம்    மொத்தம்    7,117    6,798         இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்                                                         திரு தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு,இ.ஆ.ப., தொழில்துறை முதன்மைச் செயலாளர், திரு.நா.முருகானந்தம்,இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குநர் திரு பங்கஜ் குமார் பன்சல், இ.ஆ.ப., தொழில்துறைச் சிறப்புச் செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்ணி, இ.ஆ.ப., அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு