810 மெகவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

 

மேட்டூர், ஜூன் 3: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 810 மெகவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், 2வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 2வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.

முதல் பிரிவில் 4வது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்தால், மீண்டும் நிறுத்தப்பட்ட அலகுகளில், மின் உற்பத்தி துவக்கப்படும் என அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் பிரிவில் உள்ள 3அலகுகளில் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை