8 கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் பணியிட மாற்றம் அரசு செயலாளர் உத்தரவு

 

வேலூர், செப்.11: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம் செய்து அரசு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் இந்துமதி- சென்னை மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநராகவும், அங்கு பணியாற்றிய அமலதாஸ், நுகர்வோர் கூட்டுறவு இணைய கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் லோகநாதன்-தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மாதவன்-கூடுதல் பதிவாளராக (தேர்தல் பிரிவு) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சர்க்கரை துறை ஆணை அலுவலக கூடுதல் பதிவாளர் பழனிவேலு, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளராகவும், கூட்டுறவு சங்கங்களின் (விற்பனை திட்டம் மற்றும் வளர்ச்சி) கூடுதல் பதிவாளர் சுப்ரமணியன், கூட்டுறவு சங்கங்களின் (நிதி மற்றும் வங்கியியல்) கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை கூடுதல் பதிவாளர் குமார், கூட்டுறவு சங்கங்களின் (விற்பனை திட்டம் மற்றும் வளர்ச்சி) கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் கூடுதல் பதிவாளர் ரமணிதேவி, தமிழ்நாடு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி கூடுதல் பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்து அரசு செயலாளர் ஜகந்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை