8 கிலோ கஞ்சா கடத்திய செங்கல்பட்டு ஆசாமி கைது காட்பாடியில் போலீஸ் சோதனையில் சிக்கினார் திருப்பதி- சேலம் அரசு பஸ்சில்

வேலூர், ஆக.13: காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் 8 கிலோ கஞ்சா கடத்திய செங்கல்பட்டை சேர்ந்த ஆசாமி கைது செய்யப்பட்டார். ஆந்திரா மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக பல்வேறு ஊர்களுக்கு பஸ், கார், ரயில் என பல்வேறு வழிகளில் தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை தடுப்பதற்காக தமிழக- ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் நேற்று காலையும் காட்பாடி போலீசார் கிறிஸ்டியான்பேட்டை எல்லை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்ஸில் சோதனை செய்தனர். இதில் ஒருவர் வைத்திருந்த பையில் சுமார் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டை சேர்ந்த கணேசன்(40) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் கஞ்சாவை எங்கு கடத்தி சென்றார்? யாருக்கு சப்ளை செய்கிறார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி