8 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது

தூத்துக்குடி, ஏப். 30: தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், எஸ்ஐ சிவகுமார் மற்றும் போலீசார், சங்கரப்பேரி காட்டுப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த 8 கிலோ எடையிலான கஞ்சா பார்சல்களை எடுத்துசெல்ல வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இருப்பினும் அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், அங்குள்ள கங்கா பரமேஸ்வரி நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ்குமார் (25) என்பது தெரிய வந்தது. அவரை கைதுசெய்த போலீசார், அங்கு பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ஆந்திராவில் இருந்து கடத்திவந்து காட்டுப்பகுதியில் பதுக்கிவைத்த இந்த கஞ்சாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய கூட்டாளியான தூத்துக்குடி எஸ்எம்புரத்தை சேர்ந்த சுகுமார் (22) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை