7 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகை: கடந்த ஆண்டை விட 1.5 லட்சம் குறைவு

ஊட்டி: கோடை சீசனை கொண்டாட நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த இரு மாதங்களில் 7 லட்சத்து 3,362 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மலர் கண்காட்சி நடந்த 17 நாட்களில் 2.41 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வந்துள்ளனர். மே மாதம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 783 பேரும், மலர் கண்காட்சி நடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 179 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 பேர் தாவரவியல் பூங்காவிற்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 லட்சத்து 651 பேரும், மே மாதம் 4 லட்சத்து 2711 பேர் என மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 852 பேர் குறைந்துள்ளனர். இந்த ஆண்டு முதன் முறையாக சென்னை உயர்நீதிமன்றம் இ பாஸ் முறையை அறிமுகம் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் காரணமாக பல பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்த்தனர்.

Related posts

இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்; தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: போராட்டம் வலுக்கிறது

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியது ஆஸ்திரேலியா

அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர், சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் : ராகுலின் பேச்சால் கடுப்பான மோடி!!