படகு கடலில் மூழ்கி 7 மீனவர்கள் தவிப்பு: ஒருவர் மயங்கி சாவு


ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகு கடலில் மூழ்கி 7 மீனவர்கள் பரிதவித்தனர். மேலும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் மயங்கி விழுந்து பலியானார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த சவேரியார் அடிமை என்பவரது விசைப்படகில் 7 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். திடீரென படகின் அடிப்பகுதியில் பலகை உடைந்து கடல் நீர் உள்ளே புகுந்தது.

இதனால் படகு மூழ்கியது. இதையடுத்து கடலில் தவித்த மீனவர்கள், மற்ற படகுகளில் ஏறி உயிர் தப்பினர். இதேபோல தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த அன்டரன் லியோன் படகில் இருந்த ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தை சேர்ந்த மீனவர் செல்வராஜ்(50) திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து மரைன் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மீன்பிடிக்க சென்ற குழந்தை தொழிலாளர்8 பேர் மீட்பு
குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி மீன்பிடித் தொழிலுக்கு சிறார்களை அதிகம் பணியில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்தது. இதனால் கலெக்டரின் உத்தரவின்பேரில் நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மலர்விழி, இந்தியன் ரெட் கிராஸ் ரமேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்த 8 சிறுவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு, அவர்கள் படிப்பை தொடர மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Related posts

லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே : ஒடிசா உயர் நீதிமன்றம்