77வது சுதந்திர தினத்தையொட்டி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

மாமல்லபுரம்: நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் முக்கிய தினமாக கருதப்படுகிறது. இதனை, சிறப்பாக கொண்டாடும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி – கல்லூரி மாணவர்களை அழைத்து, அனைத்து அரசு துறைகளும் விழிப்புணர்வு மற்றும் ஊர்வலம் நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அதன்படி, மாமல்லபுரம் தொல்லியல் துறை சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நிகழ்ச்சி நேற்று காலை வெண்ணெய் உருண்டை பாறை அருகே தொடங்கி மேற்கு ராஜவீதி, தென் மாட வீதி, கடற்கரை சாலை வழியாக சென்று கடற்கரை கோயில் முன்பு நிறைவு பெற்றது. இந்த, விழிப்புணர்வு ஊர்வலத்தில் 70க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு, கையில் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்