75-வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை 3 நாள் ஏற்ற தமிழக அரசு முடிவு

சென்னை: 75-வது சுதந்திரத் திருநாள் ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15ம் தேதி என 3 நாட்கள் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஆஜாதி கா அம்ரித் மகாத்சோவ்வின் ஒரு அங்கமாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ‘ஹர் கார் திராங்கா’ என்ற நிகழ்ச்சியினை வரும் ஆகஸ்ட் 13, 14ம் தேதி மற்றும் 15ம் தேதி  ஆகிய நாட்களில் கொண்டாடுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.  அந்த நாட்களில் வீடுகள், அனைத்து அரசு அலுவலகங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், காவல் நிலையங்கள், தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை வழங்கினார். www.harghartiranga.com என்ற வலைதளத்தில் பொதுமக்கள் தேசியக் கொடியுடன் செல்பி எடுத்து பதிவேற்றம் செய்யலாம்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை