75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்: 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத்தில் பாத யாத்திரையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நாட்டின்  75வது ஆண்டு சுதந்திர தின விழாவை ”அசாத் கா அம்ருத் மகேட்சவ்” என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு 75வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் குஜராத்தில் நேற்று தொடங்கியது. இதற்காக குஜராத் வந்த பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார். அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தண்டி யாத்திரையை தொடங்கினார். இதை நினைவுகூறும் வகையில், குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து பாத யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, நேற்று இந்த பாத யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 81 பேர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நவ்சாரியில் உள்ள தண்டி வரை 386 கி.மீ. தொலைவுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். 25 நாட்களுக்கு பின்னர் ஏப்ரல் 5ம் தேதி இந்த யாத்திரை நிறைவு பெறும். 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு