75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசிய கொடியை  ஏற்றினார். சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி, தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்தார். நாட்டின் 76வது சுதந்திர தினம்  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. காலை 8 மணி முதலே நிகழ்ச்சியில் பங்கேற்க எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு  மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் துறை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். முதல்வராக பதவியேற்று இரண்டாவது முறையாக அவர் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து, தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார். விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்தனர். சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டடங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை