கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் 39 பேர் மாற்றம் செய்துள்ளனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் புதிதாக 34 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், காவலர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்கள் 39 பேரை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் புதிதாக 34 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

Related posts

கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை