கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கம்பம் : கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 660 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதாக உத்தமபாளையம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கம்பம்மெட்டு பிரிவு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் சுமார் 22 பிளாஸ்டிக் சிப்பங்களில் 30 கிலோ வீதம் சுமார் 660 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை கைப்பற்றி வாகனத்தை ஓட்டி வந்த கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த முருகன் மகன் நந்தகுமார்(26) என்பவரை கைது செய்த புட்செல் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!