70 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

அரூர், ஏப்.2: தர்மபுரி மாவட்டம் அரூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மஞ்சள், பருத்தி ஆகியவை ஏலம் விடப்படுகிறது. உற்பத்தியாளர்கள் கொண்டுவரும் விளை பொருட்களை மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் என பெரிய அளவிலான வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு வாங்குவதால், விலை அதிகம் கிடைக்கிறது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 700 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஒட்டுமொத்தமாக நேற்று ₹60 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது. இதில் விரலி மஞ்சள் ₹14,909 முதல் ₹18,369 வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ₹14,109 முதல் ₹15,909 வரையிலும் ஏலம் போனதாக கூட்டுறவு சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து