70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் முதல்வர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே தமிழக முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 70 சதவீத வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.திருப்போரூர் தெற்கு ஒன்றியம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி முதலை பண்ணை அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் எம்.சேகர் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடநெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் வே.பொன்னுரங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவதுமுதல்வர் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறோம். முதல்வர், இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி கட்டிலிலே இருக்க போகிறார். ஆட்சிக்கு, வந்து 10 மாதத்தில் 505 வாக்குறுதிகளை அளித்து, அதில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்தார். கூட்டுறவு, கடன் சங்கத்தில் சுயஉதவி குழு மூலம் வாங்கிய கடன் ₹2,500 கோடியை தள்ளுபடி செய்து, 15 லட்சம் பெண்களின் கடனை தீர்த்தவர். அதிமுக ஆட்சியில் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் 2017ம் ஆண்டு முதல் யாருக்கும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு உடனே வழங்கினோம். தற்போது, அந்த திட்டத்தை நிறுத்தி, பள்ளி, கல்லூரி மாணவிகளின் உயர் படிப்பை கருத்தில் கொண்டு மாதம் ₹1000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால், 17 லட்சம் பெண்கள் பயனடைவார்கள். அதிமுக ஆட்சியில் வீட்டுக்கு ஒரு செல்போன் தருவதாகவும், 20 லிட்டர் குடிநீர் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், ஏமாற்றி விட்டனர். தமிழகம், முழுவதும் புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட பள்ளிக்கல்வி துறைக்கு திமுக அரசு ₹38 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், ‘முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்று ₹6,100 கோடி முதலீடுகளை பெற்று, 17 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கக் கூடிய 11 நிறுவனங்களை தொடங்கி வைக்க உள்ளார். ஜெயலலிதா மரணத்தில், உள்ள மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் தான் வெளிக் கொண்டு வரப்போகிறார். மக்களை தேடி மருத்துவ திட்டத்தை கொண்டு வந்து, இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்