சாய்பாபாவின் அருளை பெற காணிக்கையாக தர வேண்டிய 7 பொருட்கள்..!!

சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்த 7 பொருட்களை அவரை வழிபடுவதற்கு ஏற்ற வியாழக்கிமையில் அவருக்கு காணிக்கையாக வழங்கினால் அவருடைய அருளாசியை நாம் முழுவதுமாக பெற்று விடலாம்.

சாய் பாபா வழிபாடு
இந்து மதத்தில் மிக பிரபலமான ஆன்மிக குருவாக விளங்கக் கூடியவர் ஷீரடி சாய்பாபா. இவரை சிவ பெருமானின் அம்சமாகவும், தத்தாரேயரின் வடிவமாகவும் நினைத்து வழிபடுபவர்கள் ஏராளம். மனித உருவில் வந்த கடவுளாகவும், மகானாகவும், குருவாகவும் பலர் சாய்பாபாவை போற்றுகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் சாய் பக்தர்களும், சாய் வழிபாட்டு தலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். சாய்பாபா, ஷீரடியில் மட்டுமின்றி பல இடங்களிலும் பல அதிசயங்களை நிகழ்ச்சி வருகிறார். இப்போதும் பலர் சாய் தரிசனத்தை பெற்று வருகிறார்கள். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் பலரும் சாய் பக்தர்களாக இருந்து வருகிறார்கள் இந்தியாவிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிகமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்லும் தலமாக ஷீரடி அமைந்துள்ளது.

சாய்பாபாவை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமை சொல்லப்படுகிறது. இந்த நாளில் சாய்பாபாவிற்கு பிரியமான 7 பொருட்களை அவருக்கு காணிக்கையாக நம்முடைய பாவங்கள் விலகும். சாய்பாபாவின் ஆசி பரிபூர்ணமாக கிடைக்கும் என்றும் சொல்லபடுகிறது. இந்த 7 பொருட்களை காணிக்கையாகவும், தானமாகவும் கொடுப்பதுடன் இவற்றை நாமும் சாப்பிட்டால் பாபாவின் ஆசீர்வாதங்கள் நமக்கு கிடைக்கும்.

சாய்பாபாவிற்கு பிடித்த 7 பொருட்கள் :

கீரை – கீரை சத்தான உணவு மட்டுமல்ல சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தமான உணவும் கூட. வியாழக்கிழமையில் சாய் பாபா கோவில்களில் நடக்கும் அன்னதானங்களுக்கு கீரை வாங்கிக் கொடுக்கலாம்.

அல்வா – நமக்கு பிடித்ததை போலவே சாய்பாபாவிற்கும் அல்வா மிகவும் பிடித்த ஒன்று. சாய்பாபாவிற்கு கோதுமை மாவு அல்லது ரவையில் செய்த அல்வாவை காணிக்கையாக கொடுக்கலாம்.

கிச்சடி – சாய்பாபா மிகவும் எளிமையாக அருள் புரியக் கூடியவர். தோற்றத்திலும் மட்டுமின்றி அருள் செய்வதிலும் எளிமையானவர். இவருக்கு எளிய உணவான பருப்பு சாதம், கிச்சடி அல்லது கலவை சாதம் ஆகியன மிகவும் விருப்பமான ஒன்று.

தேங்காய் – பொதுவாக அனைத்து தெய்வங்களுக்குமே வழிபாட்டிற்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. சாய்நாதருக்கும் தேங்காய் பிடித்தமானது. அதனால் வியாழக்கிழமையில் பாபாவிற்கு தேங்காய்களை காணிக்கையாக கொடுக்கலாம்.

மலர்கள் – சாய்பாபா கோவிலுக்கு செல்லும் போது உதிரிப்பூக்களாக வாங்கிக் கொடுப்பதை விட கட்டிய பூச்சரம் அல்லது மாலையை அவருக்கு காணிக்கையாக கொண்டு செல்ல வேண்டும். பல வண்ண மலர்களால் அர்ச்சிப்பது பாபாவிற்கு பிடித்தமான ஒன்று.

பழங்கள் – இவனி சுவை உள்ள அனைத்து பழங்களும் சாய்பாபாவிற்கு பிரியமானவை. அதனால் சாய்பாபாவிற்கு காணிக்கையாக இனிப்பான எந்த பழத்தை கொடுத்தாலும் அவர் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்.

பாபாவின் அருளை பெறலாம்
இனிப்புக்கள் – நம்மை போலவே இனிப்புக்களை மிகவும் விரும்பக் கூடியவர். அவருக்க பசும் பாலில் தயார் செய்த, அதுவும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே செய்யும் இனிப்பு வகைகள் பாபாவிற்கு பிடித்தமான ஒன்றாகும்.

சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்த 7 பொருட்களை அவரை வழிபடுவதற்கு ஏற்ற வியாழக்கிமையில் அவருக்கு காணிக்கையாக வழங்கினால் அவருடைய அருளாசியை நாம் முழுவதுமாக பெற்று விடலாம்.

Related posts

புண்ணியங்களைப் புரட்டித் தரும் புரட்டாசிமாதம்

தேரழுந்தூர் தேவாதிராஜன்

பாரளந்த பெருமானின் புகழ்பாடும் புரட்டாசி!