7 சதவீதம் கூலி உயர்வு வழங்காததால் பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

திருப்பூர் : பனியன் உற்பத்தியாளர்கள் 7 சதவீத கூலி உயர்வு வழங்காததால் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி இந்த ஆண்டுக்கு பவர் டேபிள் உரிமையாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும்.

ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 7 சதவீத கூலி உயர்வை வழங்காமல் உள்ளனர். இதனால் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்திவிட்டு கடந்த 19ம் தேதி முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனியன் உற்பத்தியாளர்களிடம் இருந்து துணிகளை வாங்குவதையும், தைத்து கொடுத்த பனியன் துணிகளை டெலிவரி கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்தினர். இந்த நிலையில் 7 சதவீதம் கூலி உயர்வு கொடுக்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பது, டெலிவரி கொடுப்பது இல்லை என்று முடிவு செய்து நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதில் 350க்கும் மேற்பட்ட பவர் டேபிள் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன என சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி 7 சதவீதம் கூலி வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

Related posts

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு ரூ818 கோடிக்கு மது விற்பனை: கடந்த வருடத்தை விட அதிகம்

கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு