7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, சிவகங்கை, விருதுநகரில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது….

Related posts

மஞ்சப்பை திட்டம் மூலம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 25 % குறைந்துள்ளது: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை என்று பேட்டி

வடகிழக்கு பருவமழை: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம்