7ம் கட்ட பேச்சுவார்த்தை 4ம் தேதி தீர்வு காணாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: வரும் 4ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், 6ம் சுற்று பேச்சவார்த்தை கடந்த 30ம் தேதி நடந்தது. இதில் புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்யவும், பயிர் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிப்பதை ரத்து செய்யவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டது.ஆனாலும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவது ஆகிய முக்கிய இரு கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதுதொடர்பாக 7ம் சுற்று பேச்சுவார்த்தை வரும் 4ம் தேதி மதியம் 2 மணிக்கு நடக்க உள்ளது. இது குறித்து டெல்லி போராட்ட களத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று அளித்த பேட்டியில், ‘‘4ம் தேதி பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். அரியானாவில் ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்குகள் மூடப்படும். வரும் 6ம் தேதி டிராக்டர் பேரணி நடத்துவோம். அரியானா-ராஜஸ்தான் எல்லையில் போராடும் விவசாயிகள் டெல்லி எல்லை நோக்கி புறப்படுவார்கள்’’ என எச்சரித்துள்ளனர்.‘என் உறுப்புகளை விற்று கடனை அடையுங்கள்’மத்திய பிரதேச மாநிலம், சத்தர்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டல்கண்ட் பகுதியை சேர்ந்தவர் முனீந்திர ராஜ்புத். 35 வயது விவசாயியான இவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ‘என் உடல் உறுப்புகளை விற்று கடனை அடையுங்கள்’ என்று எழுதி வைத்துள்ளார். இவருடைய சகோதரர் கூறுகையில், ‘‘விவசாயத்தில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. அவருடைய மாடும் மின்சாரம் தாக்கி இறந்தது. இதனால், பிழைப்புக்காக மாவு மில் தொடங்கினார். ஊரடங்கு காரணமாக இதிலும் நஷ்டம். மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்தார். இதனால், ராஜ்புத்தின் மில்லை சீல் வைத்த அதிகாரிகள், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மின் கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டு கெஞ்சியும் அதிகாரிகள்  பொருட்படுத்தவில்லை. ஊர் மக்கள் முன்னிலையில் இத்தனை சம்பவங்களும் நடந்ததால், அவமானத்தில் தற்கொலை செய்துள்ளார்,’’ என்றார்.850 பேராசிரியர்கள் ஆதரவுடெல்லி பல்கலை., பனாரஸ் இந்து பல்கலை., உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 850க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட திறந்த மடலை அனுப்பி உள்ளனர். அதில், விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பதாக அரசு தரும் உறுதிமொழியை உறுதியாக நம்புவதாகவும், 3 வேளாண் சட்டங்கள் அனைத்து தடைகளில் இருந்தும் வேளாண் வர்த்தகத்தை விடுபடச் செய்யும் என்றும் கூறி உள்ளனர்….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு