6ம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஏப்.19 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன. தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் 43 சட்டமன்ற தொகுதியிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும். ஜம்மு – காஷ்மீரில் அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அங்கும் வாக்குப்பதிவு நடைபெறும். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!