பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, கிழக்கு மண்டல போலீஸ் சரகம் பானஸ்வாடி 100 அடி சாலையில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் கைதான நபர்களில் ஒருவர், சிறுவர் என்பதால் அவரின் பெற்றார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுபோல் தெற்கு மண்டல போலீஸ் சரக பகுதிகளில் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சாலையில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலியாஸ் நகரில் சோயத் பாஷா மாலை 7 மணி அளவில் சாலையில் வீலிங் சாசகத்தில் ஈடுபட்டார். அவரின் சாகசத்தினால், சாலையில் செல்கிற பயணிகள், பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மேற்கு மண்டல சரக போக்குவரத்து துணை க மிஷனர் அனிதா பி ஹத்தண்ணவர் கூறியிருப்பதாவது: சாலையில் பயணிக்கும் நபர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் வீலிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சிலர் தடையை மீறி இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் நிலையில் அவர்கள் மீது எப்ஐஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. அதே நேரம், வீலிங் சாகத்தில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா