பள்ளி விடுதியில் பேன் எண்ணெய் கலந்த சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அஞ்சுமான் என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் மாணவர் விடுதியில் தங்கி படித்து வரும் 6 மாணவர்களில் ஒருவன், நேற்று முன்தினம் இரவு ஊரில் இருந்து கொண்டு வந்த சத்துமாவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்களும் திடீரென ஒன்றின் பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகிகள் மயங்கிய மாணவர்களை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவர்கள் சாப்பிட்ட சத்துமாவில் விஷம் கலந்து இருந்ததாக கூறினர். இதை கேட்டு விடுதி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார், பள்ளி மாணவர் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விடுதியில் தங்கி இருந்த மாணவன் ஒருவன் தலையில் அதிகளவில் பேன் இருந்துள்ளது. இதனால், அவனது பெற்றோர் தேங்காய் எண்ணெயில் ‘பேன்’ மருந்து கலந்து கொடுத்துள்ளனர். இது விடுதியில் இருந்த மாணவர்களுக்கு தெரியாது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்துமாவு சாப்பிடும் போது, மாணவர் பையில் வைத்திருந்த பேன் மருந்து கலந்த தேங்காய் எண்ெணயை எடுத்து சத்துமாவில் கலந்து சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் 6 மாணவர்களும் அடுத்தடுத்து மயங்கியது விசாரணையில் தெரியவந்தது. தேனாம்பேட்டை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டர் மாயம்\

வியாபாரியை மிரட்டியவருக்கு வலை

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சருக்கு பாஜவினர் வரவேற்பு