65வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் மேல்மா- சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி

செய்யாறு, செப்.5: மேல்மா- சிப்காட் திட்டத்தை கைவிட கோரி 65வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேல்மா பகுதியில் தொழிற்பேட்டை அறிவித்து 3,174 ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்த கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வடஆழப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, நெடுங்கல், வீரம்பாக்கம் மற்றும் தேத்துரை ஆகிய 9 கிராம விவசாயிகள் செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, கலெக்டரிடம் மேல்மா-சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனு அளித்தனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை கைவிடும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து மேல்மா-கூட்ரோடில் கடந்த மாதம் 2ம்தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். தொடர்டந்து 65வது நாளாக நேற்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் கருவேல மரங்கள் அகற்ற அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

எளம்பலூர் பிரம்மரிஷி மலை டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

ஆண்டிமடம் அருகே ராமன் கிராமத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழுவுக்கு பயிற்சி