630 மில்லிகிராம் தங்கத்தில் கலைஞரின் உருவம்: சிதம்பரம் பொற்கொல்லர் அசத்தல்

சிதம்பரம்: சிதம்பரம் விஸ்வநாதன் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், பொற்கொல்லர். இவர் ஒரு கிராமுக்கும் குறைவாக, அதாவது 630 மில்லி கிராம் தங்கத்தில் கலைஞரின் உருவத்தை செய்து அசத்தி இருக்கிறார். 630 மில்லி கிராம் தங்கத்தில் 3 சென்டி மீட்டர் உயரம், 3 சென்டி மீட்டர் அகலத்தில் நுண்ணியமான வேலைப்பாட்டுடன், கலைஞர் கருப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு, சால்வை அணிந்தபடிஎப்படி இருப்பாரோ அதுபோலவே மிக அழகாக செய்திருக்கிறார். கலைஞரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 99 மில்லி கிராம் தங்கத்தில் கலைஞர் பெயரை தமிழில் பொறித்து அதில் கருப்பு, சிவப்பு வண்ணமும் பூசி அசத்தி இருக்கிறார். தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைத்த கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், 630 மில்லி கிராம் தங்கத்தில் கலைஞரின் உருவத்தை செய்ததை பெருமையாக கருதுகிறேன் என்றார் அவர்….

Related posts

கட்சி வளர்ந்திருப்பதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் பொய்யையே பேசி வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

ரேஷனில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் அனைவருக்கும் விநியோகம்: எடப்பாடிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்