6 மாத இடைவெளிக்கு பிறகு: திருப்பதியில் 1ம் தேதி முதல் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்

திருமலை: திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா அளித்த பேட்டி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஏப்ரல் 12ம் தேதியுடன் நேர ஒதுக்கீடு இலவச டிக்கெட் வழங்கும் முறையை நிறுத்தியது. பல பக்தர்கள் தொடர்ந்து மீண்டும் நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்க வேண்டும் என கேட்டனர். இதையடுத்து, அறங்காவலர் குழு கூட்டத்தில் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பதி பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை மற்றும் ரயில் நிலைய பின்புறம் உள்ள 2வது சத்திரம் ஆகிய இடங்களில் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் நவம்பர் 1ம் தேதி முதல் வழங்கப்படும். தினமும் டிக்கெட் உள்ள வரை வழங்கப்படும். சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் முதல் 25 ஆயிரமும், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் 15 ஆயிரம் டிக்கெட்டும் வழங்கப்படும். நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் சோதனை அடிப்படையில் விஐபி தரிசன நேரத்தை டிசம்பர் 1ம் தேதி முதல் காலை 8 மணி முதல் மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. ஆன்லைன், ஆப்லைனில் வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு, திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் தங்குமிடம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். * 20 மணிநேரம் காத்திருப்புதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 63,512 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.35,549 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.72 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பி சிலா தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்….

Related posts

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல்

13 முதியோர்களின் பார்வை பறிபோனது: ஒடிசாவில் முதியோர் இல்லத்துக்கு சீல்

டெல்லியில் அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து!!