6 நாட்கள் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் தமிழகத்தில் 1.32 கோடி தடுப்பூசி ெசலுத்தப்பட்டுள்ளது: மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில்  தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக,  தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி,  தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91  லட்சம் பேருக்கும், 19ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம்  பேருக்கும், 26ம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த  3ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10ம் தேதி  32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 6வது கட்ட மெகா  கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமையான நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 23.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.  அதன்படி, இதுவரை நடைபெற்ற 6 மெகா கொரோனா தடுப்பூசி மூலம் 1.32 கோடி  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த  22ம் தேதி வரை 5.16 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு