6 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை அரசு அச்சகத்தின் டிஎஸ்பியாக உள்ள சண்முகம், பதவி உயர்வு பெற்று வேலூர் மாவட்டம் தலைமையிட கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த பொன்னுச்சாமி, திருப்பூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பியாகவும், வேலூர் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக இருந்த பொற்செழியன், சேலம் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், சேலம் சரக போலீஸ் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக இருந்த தங்கவேலு, மயிலாடுதுறை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக உள்ள தேவராஜ், விழுப்புரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கும், சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஆனந்தகுமார் பதவி உயர்வு பெற்று, வடசென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்