6 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை அரசு அச்சகத்தின் டிஎஸ்பியாக உள்ள சண்முகம், பதவி உயர்வு பெற்று வேலூர் மாவட்டம் தலைமையிட கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த பொன்னுச்சாமி, திருப்பூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பியாகவும், வேலூர் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக இருந்த பொற்செழியன், சேலம் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், சேலம் சரக போலீஸ் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக இருந்த தங்கவேலு, மயிலாடுதுறை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக உள்ள தேவராஜ், விழுப்புரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கும், சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஆனந்தகுமார் பதவி உயர்வு பெற்று, வடசென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

Related posts

நிலத்தடி நீர் அதிகரிப்பு, வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் ₹120 கோடியில் 12 ஏரிகள் மறுசீரமைப்பு: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் வரை கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

நண்பரின் சகோதரருக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள் தண்டனை:  மற்றொருவருக்கு 20 ஆண்டு சிறை  சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு