6 இடத்தில் யூ டர்ன் செய்ய ஏற்பாடு

கோவை, ஏப்.11: கோவை நகரில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட், ஆத்துப்பாலம், சிந்தாமணி, நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல் இல்லாமல் ரவுண்டானா அமைக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் தேக்கம் தடுக்க இந்த திட்டத்ைத மாநகர போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் வாகனங்கள் திரும்பாமல் சுற்றி செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.இதன் மூலமாக விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவினாசி ரோட்டில் 6 இடங்களில் வாகன நெரிசல் தடுக்க யூ டர்ன் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்சோ பெட்ரோல் பங்க், ஆர்கே மில்ஸ், பயனிர் மில்ஸ், கிருஷ்ணம்மாள் கல்லூரி, பன்மால் சந்திப்பு, ஹோப் காலேஜ் பகுதியில் யூ டர்ன் முறையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நெரிசல் குறைகிறதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை