5 பேர் உயிரிழப்பு தலைவர்கள் கண்டனம்

சென்னை: விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழப்பு நடந்ததற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை காண லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். அந்த சமயம் வெயிலின் தாக்கம், கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள தற்காலிக மருத்துவ மையங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 90க்கும் அதிகமானோர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் எம்எல்ஏ சரத்குமார், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related posts

இளைஞர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது

நம் நாட்டை பாதுகாப்பதில் உங்களின் பங்கு அளப்பரியது: விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

தமிழ்நாட்டில் 10, 11 ஆகிய 2 நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட்